புதன், 7 ஆகஸ்ட், 2013

அகத்தியர், அகத்தியன், கல்யாணி தீர்த்தம், பொதிகை மலை, அகஸ்தியர் அருவி




ஓம் அகத்தீசாய நம! 
ஓம் அகத்தீசாய நம! 
ஓம் அகத்தீசாய நம!  
ஓம் அகத்தீசாய நம! 
ஓம் அகத்தீசாய நம!  


யாதுமாகிநின்ற நித்திய சிரஞ்சீவி
ஸ்ரீ சிவசக்தி சொரூப  ஸ்ரீமாதா 
ஸ்ரீ லோபாமுத்திரை சமேத 
ஸ்ரீ அகத்திய மகரிஷி திருவடிகள் சரணம் 

எல்லாம் வல்ல ஈசன் சிவபெருமானின் கருணையில் உங்கள் எல்லோரயும் வணங்கி இப்பதிவை ஆரம்பித்து விட்டேன். சித்தர் என்றால் நமக்கு முதலில் தெரிய வருவது நம் தலையா சித்தர் ஸ்ரீ அகத்தியர்தான்.  ஸ்ரீ அகத்தியரின் தலைப்பில் அவருடைய ஆசியினாலும் என்னக்கு தெரிவிக்கப்பட்ட நல்ல கருத்துக்களை உங்கள் எல்லோரிடமும் பதிய ஆரம்பிக்கப்பட்ட வலைத்தளம்தான் "அகத்தியர்".  இங்கே மதம், சாதி என்ற பேதம் கிடையாது. ஒன்றே குலம் ஒருவனே இறைவன்.

ஒருவன்  இறைவனா?  அப்படி என்றால், யார் அந்த இறைவன். அதை தேடுவதுதான் நம் வேலையாக இருக்க வேண்டும்.  அப்பாவையும் அம்மாவையும் எப்படி தெரிந்து கொண்டோம் அதுபோல நம் அந்த பக்குவபட்ட நிலைக்கு வரும்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.  இறைவன் மிக பெரியவன், அவனை நாம் ஒரு குறுகிய வட்டத்தில் பார்க்க வேண்டாம்,  எங்கும் இருக்கும் அந்த ஆதியை தேடுவோம்... காத்திருப்போம்  அவனை காணும்வரை ....  நானும் காத்திருக்கிறேன் .........

நான் உங்களில் ஒருவன் எனக்கு தெரிந்த படி நான் இறைவனை தேடுகிறேன்.  எனக்கு இதில் சில சமயம் ஆனந்தமும் பேரானந்தமும் கிடைத்திருக்கிறது.  

ஏனெனில், கடவுளை எங்கே தேடுவது? எப்படி தேடுவது என ஆரம்பிக்கும் போது நமக்கு ஒவ்வொருவரும் பல கருத்துக்களை சொல்கின்றனர். நானும் நிரம்ப குழப்பங்களில் இருந்த நாட்களும் உண்டு.  இக்கலியுகத்தில் இறைவனின் நாமத்தை சொன்னாலே போதும், அந்த நாமத்தை முழு நம்பிக்கையோடு நாம் சொல்லும்போது அது நம்மை இறைநிலைக்கு அழைத்துசெல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். இங்கே வருபவர்கள் இறைவனை தேடுபவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.  பக்தி என்பது ஒரு பக்குவப்பட்ட நிலையின் ஆரம்பம் என்பது என் கருத்து. இங்கே வாதம் என்பது வராது.

வாருங்கள்....... எல்லோரும் இணைந்து செல்வோம், கடவுளை தேடி..